விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இதில் உதவி அர்ச்சகராக ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவரும் சில அர்ச்சகர்களும் சேர்ந்து வீட்டில் மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய வீடியோ சமூக வலைதளர்கள் வெளியாகி நிலையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதை பார்த்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இதுகுறித்து கோயில் அதிகாரியிடம் கேட்கையில் சம்பந்தப்பட்ட உதவி அர்ச்சகர் உட்பட நடனமாடிய அர்ச்சகர்கள் நான்கு பேரும் கோயிலுக்கு வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
கோயில் பூஜை உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கு பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதற்கிடையில் உதவி அர்ச்சகர் தன்னை இரண்டு பேர் தாக்கியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் திடீரென்று புகார் அளித்துள்ளார். இது குறித்து நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இப்படி கோவில் அர்ச்சகர்கள் ஆபாச நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் கோயில் வளாகத்தில் பெண் பக்தருடன் விபூதி அடித்து விளையாடியுள்ளார்கள். அர்ச்சகர்களின் இந்த செயலால் பெரிய மாரியம்மன் கோயில் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். இதனால் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுட்டுள்ளது.
