மத்திய பிரதேச மாநிலம் கோல்கவான் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கல்லூரி மாணவி ஒருவரை நான்கு சிறுமிகள் சேர்ந்து சூழ்ந்துகொண்டு கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு அவருடன் படிக்கும் ஆண் மாணவர் ஒருவர் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை மாணவி கண்டித்த நிலையில், அந்த ஆண் மாணவனின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் மற்றொரு தோழி, ஒரு காரணத்தைக் கூறி ஆகஸ்ட் 6 அன்று மாணவியை ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், வனப்பகுதிக்கு அருகே உள்ள தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, அங்கு முகத்தை மூடியபடி காத்திருந்த மேலும் மூன்று சிறுமிகள் சேர்ந்து அந்த மாணவியைக் குச்சியாலும் கால்களாலும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலின் போது, அந்த ஆண் மாணவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள இணங்குமாறு மிரட்டியதுடன், அவரை வீடியோ காலில் பேசவைத்து மன்னிப்பும் கேட்க வைத்துள்ளனர். பின்னர் அதை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்திலும் பரப்பியுள்ளனர். பயத்தில் குடும்பத்தினரிடம் கூறாமல் இருந்த நிலையில், வீடியோ உறவினர் கையில் கிடைக்கவே செப்டம்பர் 11 அன்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் கோல்கவான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…