மதுரை சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகள் தானிய லட்சுமி என்ற மகாலட்சுமி. 16 வயதான இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுவயதிலேயே சிலம்பத்தில் கெட்டிக்காரியாக இருந்து வந்தார். பல போட்டிகளில் வென்று பரிசுகளையும் பெற்று சாதித்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இவருக்கு கைகளில் வலி இருந்துள்ளது. இதனால் சிலம்பம் சுற்ற முடியாமலும் பள்ளிக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
வீட்டில் இருந்தபடியே மருந்துகளும் எடுத்து வந்துள்ளார். கையில் வலியால் அவதிப்பட்டு வந்த அவர் சிலம்பு விளையாட முடியாமல் போய்விட்டதே என்று நினைத்து மிகவும் வருத்தப்பட்டு உள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
