சர்ச்சைக்குரிய வீடியோ: திமுக உறுப்பினர் வைஷ்ணவி அளித்த புகார்… இன்ஸ்டா பிரபலம் அதிரடி கைது…!!

By Soundarya on கார்த்திகை 7, 2025

Spread the love

கோவையை சேர்ந்த திமுக உறுப்பினரான வைஷ்ணவி விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகியாக இருந்த நிலையில் அந்த கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டார் . இதனைதொடர்ந்து சமூக வலைதளத்தில் TVK  குறித்தும், விஜய்யின் செயல்பாடுகள் குறித்தும் வைஷ்ணவி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கிடையில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் விஜய்யை சந்திப்பதற்காக மாமல்லபுரத்திற்கு சென்றதை குறிப்பிடும் விதமாக AI  வீடியோவை ஒன்று வைஷ்ணவி வெளியிட்டு இருந்தார்.

இதற்கு TVK தொண்டர்கள் கடும் விமர்சனம் தெரிவித்து வந்திருந்தார்கள். இந்த நிலையில் instagram பிரபலமான கார்த்திக் என்பவர் வைஷ்ணவி புகைப்படத்துடன் கூடிய சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது குறித்து வைஷ்ணவி  அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.