“அம்மா நான் உன் பொண்ணு ப்ளீஸ் விட்டுரு”…. பெற்ற மகளுக்கே தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலனுடன் சேர்த்தே சீரழித்த தாய்…. சென்னையில் பயங்கரம்….!

Spread the love

சென்னையில் சொந்த மகளுக்கே தூக்க மாத்திரை கொடுத்து, தனது கள்ளக்காதலன் பாலியல் வன்கொடுமை செய்வதற்குத் தாயே உடந்தையாக இருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாலிகிராமம், கன்னியாபுரம் பகுதியைச் சேர்ந்த பாக்கியம் என்பவரது கணவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறார். வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அவர் வீட்டிற்கு வரும் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட பாக்கியம், அதே பகுதியைச் சேர்ந்த 50 வயது தட்சிணாமூர்த்தி என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். தட்சிணாமூர்த்தி அடிக்கடி பாக்கியத்தின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் பாக்கியத்தின் 20 வயது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது, தாய் கொடுத்த மாத்திரையை உட்கொண்டு அவர் மயக்க நிலையில் உறங்கியுள்ளார். நீண்ட நேரம் கழித்து விழித்துப் பார்த்தபோது, தனது உடலில் மாற்றங்கள் இருப்பதையும் பாலியல் ரீதியாகத் தான் காயப்படுத்தப்பட்டிருப்பதையும் உணர்ந்து தாயிடம் கேட்டுள்ளார். ஆனால், பாக்கியம் அதற்குச் சரியாகப் பதிலளிக்காமல் மழுப்பியுள்ளார். மீண்டும் ஒருமுறை தட்சிணாமூர்த்தி வீட்டிற்கு வந்தபோது, மகளுக்குத் தூக்க மாத்திரை கொடுத்து உறங்க வைத்துள்ளனர். அப்போது அரை மயக்கத்தில் இருந்த இளம்பெண், தன் மீது யாரோ படுத்திருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு கண் விழித்தபோது, தட்சிணாமூர்த்தி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரைத் தள்ளிவிட்டுள்ளார்.

இந்தக் கொடுமை குறித்து வெளியில் சொன்னால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனப் பாக்கியம் தனது மகளை மிரட்டியதுடன், அவரை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளார். ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத அந்த இளம்பெண், தனது தோழியின் உதவியுடன் தப்பித்து திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று தஞ்சமடைந்தார். அங்கு தங்கியிருந்தபோது கடந்த பிப்ரவரி 18-ம் தேதி அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்ற அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த இளம்பெண் 7 வாரக் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு நிலைகுலைந்து போன இளம்பெண், நடந்த விபரங்களைக் கூறி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த தட்சிணாமூர்த்தி மற்றும் அதற்குத் துணையாக இருந்த தாய் பாக்கியம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். காம இச்சைக்கு ஆசைப்பட்டுப் பெற்ற மகளையே சீரழிக்கத் துணிந்த தாயின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ரூ. 30 கோடி சொத்து மறைப்பு விவகாரம்… முதல்வர் விஜய்க்கு விழுந்த செக்?…. ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு….!

சென்னை உயர் நீதிமன்றத்தில், பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு…

11 minutes ago

“ஓடிப்போன மனைவி… சங்கிலியை உடைத்து மீண்டும் காதலனுடன் ஓட்டம்”…. கடுப்பான கணவர் செய்த அந்த காரியம்…. குஜராத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…..!

குஜராத் மாநிலம் வாபி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவரை விட்டுப் பிரிந்து சொடிலா பகுதியில் ஒரு நபருடன்…

19 minutes ago

“4 பெண் அமைச்சர்களில் யாருக்கு கலக்?”… தவெக வட்டாரங்களை அதிர வைத்த அமைச்சரவை மாற்ற ரகசியம்…. CM விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு….!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், காலியாக…

23 minutes ago

கைத்தடியுடன் கோர்ட்டுக்கு வந்த ஜெம் வீரமணி…. சென்னை POCSO நீதிமன்றத்தில் திடீர் பரபரப்பு…. அடுத்தடுத்த வெளிவரும் திடுக்கிடும் உண்மை….!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று…

27 minutes ago

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தம்…. உடனே இத செக் பண்ணுங்க…. தமிழக அரசு கொடுத்த முக்கிய அப்டேட்….!

மகளிர் உரிமைத் தொகை தொடர்ந்து தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்ய, பயனாளிகள் தங்களின் வங்கி மற்றும் ரேஷன் கார்டு விவரங்களை…

34 minutes ago