#image_title
தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளார். ஹீரோவாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி விஜய் சேதுபதி நடிப்பு மிரட்டலாக இருக்கும். இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படத்தை நெத்திலி சுவாமிநாதன் இயக்கினார். இந்த படத்தில் நடராஜ், முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்தனர். மகாராஜா கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மகாராஜா படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த நிலையில் மகாராஜா திரைப்படம் netflix ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி மாஸ் காட்டியது. இந்தியாவில் மகாராஜா திரைப்படத்தை ஓடிடியில் அதிக நபர்கள் பார்த்ததாக சாதனை படைத்துள்ளது.
மகாராஜா திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த நிலையில் மகாராஜா திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா நடைபெற்றது. அப்போது தயாரிப்பாளரும் விஜய் சேதுபதியும் இணைந்து நித்திலன் சுவாமிநாதனுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்துள்ளனர். அந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
#image_title
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…
ஆக்ராவில் ஜாதிய மறுப்பைத் தாண்டி உறவுமுறையில் ஈடுபட்டதாகக் கூறி, 17 வயது சிறுமி அவரது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்…
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சக்கரம்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த கோர சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை…
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20 வயது கல்லூரி மாணவர், தனது பகுதியில் உள்ள மாசடைந்த ஆஜனார்…
திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரு தலைமை ஆசிரியர்கள் போக்சோசட்டத்தின்…
தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற பேச்சுக்கள் அக்கட்சியினரிடையே தீவிரமடைந்து வந்தன.…