சிறுவர்களை காப்பாற்ற பால்கனியில் இருந்து பாய்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட்… தெருநாயை விரட்டியடித்து… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் படமாக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறது. அங்குள்ள வீட்டின் பால்கனியில் அமர்ந்திருந்த ‘ஜெர்மன் ஷெப்பர்ட்’ ரக நாய் ஒன்று, தெருவில் நடக்கும் சம்பவங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.

அப்போது, சாலையில் சில சிறுவர்கள் ஓடி வர, அவர்களைத் துரத்திக் கொண்டு தெருநாய் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதைப் பார்த்ததும் சற்றும் யோசிக்காமல், அந்த ஜெர்மன் ஷெப்பர்ட் பால்கனியில் இருந்து கீழே குதித்து, அந்தத் தெருநாயை விரட்டியடித்துச் சிறுவர்களைப் பாதுகாத்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்ட நெட்டிசன்கள் அந்த நாய்க்கு ‘டோகேஷ்’ எனப் பெயரிட்டு ‘பாடி கார்ட்’ எனப் பாராட்டி வருகின்றனர்.

நாடெங்கும் தெருநாய்கள் கடி மற்றும் வளர்ப்பு நாய்கள் தொடர்பான சர்ச்சைகளும் விவாதங்களும் அதிகரித்துள்ள இந்தச் சூழலில், குழந்தைகளைப் பாதுகாப்பது போல் அமைந்த இந்த 30 விநாடி வீடியோ காட்சிகள் மக்களுக்கு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

Devi Ramu

Recent Posts

“9 நாட்களாக இருண்ட சுரங்கம்… 216 மணி நேர நரகம்”…. உணவில்லாமல் உயிர்பிழைத்த அதிசயம்….. நேபாளத்தில் நடந்த நடுநடுங்க வைக்கும் சம்பவம்….!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் காணாமல்…

8 minutes ago

“ஹார்முஸ் இனி ‘ட்ரம்ப் ஜலசந்தி’?”…. போட்ட ஒரே போஸ்ட்டால் வெடித்த உலகப்போர் பதற்றம்…. ஈரானை அதிரவைத்த அந்த ஒரு அறிவிப்பு…!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து…

25 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்த 4 வயது சிறுவன்…! பள்ளி சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்… மனதை ரணமாக்கும் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இதயத்தை நொறுக்கும் சோகச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவநீத் என்ற 4 வயது…

30 minutes ago

“ராகுல் இல்ல.. விஜய்தான் PM”…. கொந்தளித்த காங்கிரஸ், கலக்கத்தில் இடதுசாரிகள்…. மோடிக்கு அடித்த ‘மெகா லக்கி பிரைஸ்’….. கூட்டணியில் உச்சக்கட்ட விரிசல்..!

2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள், தமிழகத்தில் ஆளும்…

33 minutes ago

“பெண்களுக்கு ரூ.3,000 … இலவச பயணம்… 365 நாள் லீவ்”… CM விஜய் கொடுத்த அந்த ‘3 சர்ப்ரைஸ்’ …. கொண்டாட்டத்தில் தமிழ்நாடு….!

தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய…

39 minutes ago