நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் காணாமல் போயுள்ளனர். இயற்கை பேரிடர் நடந்து 9 நாட்கள் கடந்துவிட்ட சூழலில், திரிசூல் 3A ஹைட்ரோ பவர்ஸ்டேஷன் சுரங்கத்திலிருந்து இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. மெகானிக்கல் ஃபோர்மேன் சஞ்சய் ஷா மற்றும் மெக்கானிக்கல் சூப்பர்வைசர் கபீர் மஹாராஜன் ஆகிய இருவர் அடுத்தடுத்து மீட்கப்பட்ட இந்தச் சம்பவம், சோகத்தில் ஆழ்ந்திருந்த மீட்புக் குழுவினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26 அன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதிலிருந்து இந்த நீர்மின் நிலையத்தில் பணியாற்றி வந்த 40 தொழிலாளர்கள் காணாமல் போயிருந்தனர். தற்போது மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதையின் ஆழமான பகுதிகளுக்குச் செல்லும்போது, உள்ளே இருந்து மக்களின் குரல்கள் கேட்டுள்ளன. “அச்சம் கொள்ளாதீர்கள், உங்களை காப்பாற்ற முயல்கிறோம்” என மீட்புக் குழுவினர் கூறியதற்கு, மறுமுனையிலிருந்தும் பதில்கள் வந்துள்ளன. இதன்மூலம் மேலும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளதுடன், நேபாள ராணுவமும் துணை ராணுவப்படையினரும் அங்குத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நிலத்தடிப் பாதைகளை அடைத்துள்ள கரடுமுரடான சேறு மற்றும் இடிபாடுகளை அகற்றுவதற்காகக் கனரக இயந்திரங்களும் நவீன சிறப்பு உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் பிற பகுதிகளில் உள்ள குறைந்தது ஆறு நீர்மின் நிலையங்களில் இருந்து 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் விவரங்கள் இன்னமும் கிடைக்கப்பெறாத சூழலில், திரிசூல் சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அற்புதம் ஒருபுறம் நம்பிக்கையைத் தந்தாலும், மற்றொரு நீர்மின் திட்டப் பகுதியில் துயரச் சம்பவமும் பதிவாகியுள்ளது. ரசுவா லாங்டாங் கோலா நீர்மின் திட்டச் சுரங்கப்பாதைக்குள் நேபாள ராணுவம் சுமார் 150 மீட்டர் தூரம் முன்னேறிச் சென்று நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, துரதிர்ஷ்டவசமாக இரண்டு தொழிலாளர்களின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. இருப்பினும், எஞ்சியவர்களை உயிருடன் மீட்கும் போராட்டத்தில் மீட்புப் படையினர் தொடர்ந்து களமாடி வருகின்றனர்.
அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்தியர், அங்குள்ள மருத்துவக் கட்டணங்களின் கொடூர நிதர்சனத்தைச்…
இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…
நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…
உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…