தமிழில் ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, ஒரே படத்தில் ஜென் ஸிக்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் நடிகை கயாடு லோஹர். கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்த இவருக்கு, முதல் படமே மெகா பிளாக் பஸ்டர் வெற்றியைத் தந்தது. தற்போது கோலிவுட்டின் சென்சேஷனல் ஹீரோயினாக வலம் வரும் இவர், அடுத்ததாக சூர்யா 48, இதயம் முரளி, இம்மார்ட்டல் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மஞ்சணத்தி’ உள்ளிட்ட பல முக்கியப் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
தொடர் வெற்றிகளாலும், சமூக வலைதள கிசுகிசுக்களாலும் எப்போதும் லைம் லைட்டிலேயே இருக்கும் கயாடு லோஹர், சமீபத்தில் சோஷியல் மீடியாவிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கப்போவதாக அறிவித்திருந்தார். உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தேவைப்படுவதால் நிஜ வாழ்க்கையில் அதிக நேரம் செலவிட விரும்புவதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவரைப் பற்றி பிரபல யூடியூபரும் தொகுப்பாளினியுமான விஜே பார்வதியின் அம்மா பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், விஜே பார்வதி நடிகை கயாடு லோஹருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன் அம்மாவிடம் காண்பிக்கிறார். அதைப் பார்த்த பார்வதியின் அம்மாவோ, சற்றும் யோசிக்காமல், “எனக்கு இவங்கள பிடிக்காது, வெள்ளை எலி… நடிப்பும் கிடையாது ஒன்றும் கிடையாது, சும்மா உடம்பை காட்டி நடிக்கும் பிள்ளை” என மிகவும் ஓபனாக விமர்சித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜே பார்வதி, “என்ன அம்மா இப்படி சொல்லிட்ட; தமிழ்நாட்டு பசங்களோ கயாடு சைஸை பாரு என உருகுகிறார்களே” என்று வேடிக்கையாகக் கமெண்ட் செய்துள்ளார்.
ஏற்கனவே பார்ட்டியில் பங்கேற்க 35 லட்சம் ரூபாய் சார்ஜ் செய்கிறார் என்ற சர்ச்சையால் கயாடு மனவேதனை அடைந்திருந்த நிலையில், தற்போது பார்வதியின் அம்மாவின் இந்த ஓப்பனான விமர்சனம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் மூத்தவர்களின் கருத்து என இதை சாதாரணமாகக் கடந்து சென்றாலும், கயாடுவின் ரசிகர்கள் இந்த விமர்சனத்திற்கு தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…