Categories: சினிமா

துருவ நட்சத்திரத்தை ஓரங்கட்டிய GVM.. 4 வருடங்களுக்கு முன்பு எடுத்த படத்தை பட்டை தீட்டி வெளியிட திட்டம்..

Spread the love

காதலுக்காகவே பிறந்து காதலுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் இவர். காதல் படங்கள் என்றாலே கவுதம் மேனன் தான் என சொல்லும் அளவுக்கு, மின்னலே, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் என பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்துள்ளார். இதையடுத்து ஆக்‌ஷன் மோடுக்கு மாறிய அவர் என்னை அறிந்தால், எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற அதிரடி ஆக்‌ஷன் திரைப்படங்களை இயக்கினார். படு பிசியான இயக்குனராக வலம் வந்த கவுதம் மேனன் ஒரு கட்டத்தில் முழுநேர நடிகராக மாறினார்.

அதற்கு காரணம் அவர் இயக்கத்தில் உருவாகி கிடப்பில் போடப்பட்ட துருவ நட்சத்திரம், ஜோசுவா ஆகிய படங்கள் தான். இதில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் உடன் ராதிகா சரத்குமார், டிடி, ரித்து வர்மா, விநாயகன், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இன்னும் ரிலீஸ் செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. சமீபத்தில் அதனை ரிலீஸ் செய்ய எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், தற்போது அப்படத்தை ஓரங்கட்டிவைத்துவிட்டு, தன்னுடைய மற்றொரு படமான ஜோசுவாவை ரிலீஸ் செய்யும் பணிகளில் இறங்கி இருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.

அதன்படி, ஜோசுவா திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் வருண் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஹே நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வென்ற நடிகர் ஆரவ்வின் மனைவி ஆவார். கார்த்திக் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து உள்ளார். நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் இப்படம் திரைக்கு வருகிறது.

Ranjith Kumar

Recent Posts

ஷாக்.! “ஒரே ஒரு இரவு மட்டும் அவனோடு” மரண படுக்கையில் மனைவி சொன்ன அந்த வார்த்தை… மனைவியின் கடைசி ஆசையால் நிலைகுலைந்து போன கணவன்..!!

மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…

3 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க” லிப்டில் நுழைய முயன்ற மருத்துவர்… தலை துண்டானதால் அலறிய செவிலியர்… லிஃப்ட்டுக்குள் 15 நிமிடம் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!

2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…

14 minutes ago

மனசாட்சியே இல்லையா..? ரயில் நிலையத்திற்கு பெண் தூக்கி வந்த சூட்கேஸ்.. சோதனையில் தெரிந்த ரத்தக் கறை… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறிய போலீசார்..!

தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…

22 minutes ago

“உண்மை சொன்ன எனக்கு ஆதரவு இல்லையா..?” மருந்து நிறுவனங்களின் மிரட்டல்.. ORS மோசடியை அம்பலப்படுத்திய மருத்துவர் சிவராஞ்சனி ராஜினாமா..!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…

28 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! அதிமுக, பாஜக ஆதரவாளர் திடீர் பல்டி..? சீமானுக்கு ஆதரவாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் உருக்கமான வேண்டுகோள்..!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

49 minutes ago

விஜய் ரூ.5 கோடியை கடனாக கொடுக்கவில்லை… கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த தந்தை SAC..!!

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…

53 minutes ago