#image_title
தமிழ் சினிமாவில் தன்னுடைய ஐம்பதாவது ஆண்டை விரைவில் காலடி எடுத்துவைக்க உள்ளார் உள்ளார் ரஜினிகாந்த். இதில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் அவர். 72 வயதிலும் அவர் நடிக்கும் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.
இதனால் இன்று வரை இயக்குனர்கள் பலரும் அவருடன் ஒரு படமாவது பண்ணவேண்டும் என்ற ஆசையில் இருக்கின்றனர். ஆனால் ரஜினியின் அண்ணாமலை படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தும் இயக்குனர் வசந்த் அந்த படத்தில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக விலகியுள்ளார்.
1990 ஆம் ஆண்டு வெளியான கேளடி கண்மணி படத்தின் மூலம் தனது தனித்துவ முத்திரையை பதித்த அவருக்கு தன்னுடைய குருநாதரான கே பாலச்சந்தர் தான் தயாரித்த அண்ணாமலை படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். அவரும் முதலில் படத்தில் ஒப்பந்தம் ஆகி திரைக்கதை பணிகளை எலலாம் மேற்கொண்டுள்ளார்.
மென்மையான கதைகளை இயக்கும் விருப்பம் கொண்ட வசந்த், அண்ணாமலை படத்தில் இருந்த கமர்ஷியல் தன்மை காரணமாக அதில் தன்னுடைய கருத்து வேறுபாடுகளை தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் இது தன்னுடைய ஸ்டைல் படம் இல்லை என்பதை உணர்ந்து அதில் இருந்து வெளியேறிவிட்டார்.
அதன் பின்னர்தான் கே பாலச்சந்தரின் மற்றொரு உதவி இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா அண்ணாமலை படத்துக்குள் வந்துள்ளார். அவர் இயக்கத்தில் வெளியான அண்ணாமலை படம் ரஜினியின் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் லிஸ்ட்டில் இடம்பிடித்தது. சுரேஷ் கிருஷ்ணாவின் ஸ்டைல் பிடித்த ரஜினி அவரை அடுத்து வீரா, பாட்ஷா மற்றும் பாபா ஆகிய தன்னுடைய படங்களின் இயக்குனராக்கினார்.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…