gautham menon reveals suriya was the first choice for minnale
தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த இயக்குனர் என்றால் கவுதம் மேனன் தான். மின்னலே படத்தின் மூலம் அறிமுகமான இவர் மின்னலாக தமிழ் சினிமாவில் அறிமுகம் கொண்டார். தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இப்போது அவரின் துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.
Still from Minnale
கௌதமை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும், காரணம் அவர் உருவாக்கிய பெண் கதாபாத்திரங்கள் தான். அறிவாக, அழகாக, துணிச்சலான பெண் கதாபாத்திரங்களை உருவாக்கியவர் கவுதம் தான். மின்னலே படத்தின் மூலமே அனைவரின் மனதிலும் இவர் இடம்பிடித்தார். தற்போது மின்னலே படம் குறித்து சுவாரஸ்யமான சில தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். அதாவது, மின்னலே படத்தின் உயிரே மாதவன் கதாபாத்திரம் தான். ஆனால் அந்த ராஜேஷ் கதாபாத்திரத்துக்கு முதல் சாய்ஸ் மாதவன் இல்லையாம், சூர்யா தான் முத்த சாய்ஸ் என கூறியுள்ளார் கவுதம் மேனன்.
Minnale
இந்த கதையை சூர்யாவிற்காக பண்ணலாம் என முடிவு செய்து, சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகருமான சிவகுமாரிடம் மின்னலே படத்தின் கதையை கூறியுள்ளார் கவுதம் மேனன். ஆனால், அந்த கதையை சிவகுமார் நிராகரித்துவிட்டாராம்.
suriya was the first choice for minnale
அதன்பின் தான் மின்னலே கதை மாதவனிடம் கூறினாராம் கவுதம். முதல் படத்தில் சூர்யாவுடன் இணைய முடியவில்லை என்றாலும், காக்க காக்க,வாரணம் ஆயிரம் என தொடர்ந்து அவருடன் பணியாற்றினார் கவுதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் துருவ நட்சத்திரம் கதையும் சூர்யாவுக்கு சொல்லப்பட்டு அதன்பின் தான் விக்ரம் அதில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையில் இருந்து அமைச்சர் சரத்குமார் விரைவில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. சமீபத்தில்…
சமூக வலைதளங்களில் லைக், ஷேர் மற்றும் ஃபாலோயர்ஸ்களைப் பெறுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதமான லட்டு பிரசாதத்தைப் பயன்படுத்துவதாக எழுந்த…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், அதே ஊரைச் சேர்ந்த…
தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…
சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…