#image_title
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இது சூர்யாவின் 42-வது படம் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கங்குவா படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கடைசியாக சூர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 2022 -ஆம் ஆண்டு விக்ரம் படத்தில் சூர்யா கேமியா ரோலில் நடித்து மிரட்டி இருந்தார். இதேபோல மாதவன் இயக்கத்தில் ரிலீசான ராக்கெட்டரி படத்திலும் சூர்யா கேமியோ ரோலில் நடித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சூரியா கதாநாயகனாக நடித்த படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் கங்குவா படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். படத்தின் போஸ்டர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அதீத வரவேற்பை பெற்றது. கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் திரிஷா பதானி, பாபி தியோல் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கங்குவா படத்தை அக்டோபர் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நாளில்தான் ரஜினிகாந்தின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் - சத்யா தம்பதியினரின் 11 வயது மகள்…
தமிழக அரசியலில் எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்காகப்…
தமிழக அரசியல் களம் தற்போது கிண்டி ஆளுநர் மாளிகையைச் சுற்றி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. 2026 சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப்…
நொய்டாவின் சௌரா ரகுநாத்பூர் கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை அளிக்காத நிலையில், தமிழக அரசியலில் ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது.…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி கொலை செய்த செவிலியரின் செயல் அப்பகுதியில்…