Connect with us

பெரிய தலையுடன் மோதும் சூர்யா.. கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..!!

CINEMA

பெரிய தலையுடன் மோதும் சூர்யா.. கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இது சூர்யாவின் 42-வது படம் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கங்குவா படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

சூர்யாவின் 'கங்குவா' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது | Kanguva First look  poster - hindutamil.in

இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கடைசியாக சூர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 2022 -ஆம் ஆண்டு விக்ரம் படத்தில் சூர்யா கேமியா ரோலில் நடித்து மிரட்டி இருந்தார். இதேபோல மாதவன் இயக்கத்தில் ரிலீசான ராக்கெட்டரி படத்திலும் சூர்யா கேமியோ ரோலில் நடித்தார்.

   

சூர்யாவின் 'கங்குவா' 2-வது போஸ்டர் எப்படி? | second look poster of Suriya  starrer Kanguva directed by Siva - hindutamil.in

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக சூரியா கதாநாயகனாக நடித்த படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் கங்குவா படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். படத்தின் போஸ்டர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அதீத வரவேற்பை பெற்றது. கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் திரிஷா பதானி, பாபி தியோல் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Kanguva - இரண்டு பாகங்களாக உருவாகிறதா கங்குவா?.. வெளியான புதிய தகவல் |  Surya's Kanguva Movie is to come out in Two Parts - Tamil Filmibeat

1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கங்குவா படத்தை அக்டோபர் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நாளில்தான் ரஜினிகாந்தின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ரஜினி 170' படத் தலைப்பு 'வேட்டையன்' - டைட்டில் டீசர் எப்படி? | rajini  starrer Vettaiyan movie teaser released - hindutamil.in

author avatar
Priya Ram
Continue Reading
To Top