2024ம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த 5 திரைப்படங்களில் ஒன்று சூர்யாவின் கங்குவா திரைப்படம். பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கங்குவா’. 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். பாபிதியோல் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். மேலும் நடிகர் கார்த்தி இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

அதாவது இந்த படத்தில் அண்ணனுக்காக கார்த்தி முதன்முறையாக புகைபிடிப்பதாக கூறப்படுகிறது. படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இதுவரை வெளிவந்த பாடல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில்,படம் நாளை வெளியாகும் நிலையில் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து விவரம் வெளிவந்துள்ளது.

அதாவது தற்போது வரை கங்குவா படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் வசூல் எந்த அளவிற்கு இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
