தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.இவர் மனைவி ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.இதனிடையே திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்ட ஜோதிகா மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ளார்.

தொடர்ந்து சூர்யாவும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கங்குவா என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இரண்டு வருடங்களாக மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகின்றது.சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’.

இந்த படமானது நவம்பர் 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனையடுத்து இந்த படத்திற்கான ப்ரமோஷன் வேளைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சூர்யா கங்குவா படத்தில் 13 லுக்கில் பண்ணியிருக்கிறாராம்.

முன்னதாக 2009 ஆம் வருடம் வெளியான அயன் திரைப்படத்தி மொத்தம் 10 லுக்கில் மட்டுமே நடித்திருந்தார். இவருடைய குரலை AI மூலமாக அனைத்து மொழிகளிலும் அவருடைய குரலே பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
