திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கங்காதீஸ்வரர் கோவில் ஒன்று உள்ளது.அங்கு பிரதோஷத்தன்று தரிசனம் செய்தால் பிரிந்த தம்பதிகள் கூட ஒன்று சேர்வார்கள் என கூறப்படுகிறது .ஒரு நேரம் சிவனின் கோபத்திற்கு ஆளானவர் துர்வாசர். சிவனின் கோபத்தில் இருந்து விடுபட வேண்டும் என இங்கு சிவலிங்கத்தை நிறுவி தினமும் அபிஷேகம் செய்தார். முனிவரை சோதிக்க விரும்பிய சிவன் பெருமான் அபிஷேகம் செய்யும் குலத்தின் நீரை வற்றுமாறு செய்தார். மறுநாள் முனிவர் அபிஷேகம் செய்வதற்காக குலத்திற்குச் சென்றுள்ளார். அப்பொழுது குலத்தில் சொட்டு நீர் கூட இல்லை. நாம் தினமும் காலையில் குளித்துவிட்டு சிவனை வழிப்பட்டோமே இப்போது இப்படியாகியுள்ளதே இது என்ன சோதனை என சிவனிடம் சரணடைந்தார்.
அப்பொழுது சிவலிங்கத்தின் அருகே ஊற்று ஒன்று பீறிட்டு அடித்தது. அதில் நீராடிய துர்வாசர் மகிழ்ச்சியில் திகைத்தார். அன்றிலிருந்து சுவாமிக்கு கங்காதேஸ்வரர் என பெயர் வந்தது . இங்குள்ள அம்மனுக்கு ‘பங்கஜவல்லி’ என்பது திருநாமம். இப்பகுதியை ஆண்ட மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டது. அது காலடைவில் கோயில் சேதமடைந்து. 2014 ஆம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தது. அடிக்கடி கருநாகம் ஒன்று சிவலிங்கத்தை அணைத்தபடி செல்வதால் சர்ப்ப தோஷம் போக்கும் தலமாக மாறியுள்ளது. தொழில் ,திருமணம், மற்றும் குழந்தைப்பேறு என பல வேண்டுதல்கள் வைத்தால் அனைத்தும் கங்காதேஸ்வரர் அருளால் நிறைவேறுகிறது.
அதிர்ச்சிகரமான இந்தச் சம்பவத்தில், தங்கம் வென்ற போலந்து போல்ட் (Pole Vault) வீராங்கனை ஒருவர், தனது விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில்…
சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரிக்கும் இந்த காலகட்டம், பொதுவாக சுப பலன்களைத் தரும் எனக் கருதப்பட்டாலும், 6,…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது பதிலளித்துள்ளார்.…
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும், துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.…
தென்னிந்தியத் திரையுலகில் நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு வாழ்வளித்த 'வெற்றித் தயாரிப்பாளர்' ஆர்.பி. சௌத்ரி (76), மே 5 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், காரல் மார்க்ஸ் பிறந்தநாளில் மரியாதை செலுத்திய புரட்சி அதிமுகவின் புகழேந்தி, எடப்பாடி…