Categories: சினிமா

அண்ணே இந்த பாட்டு ஞாபகம் இருக்கா… மகனை இழந்த பாரதிராஜாவைப் பாட்டு பாடி ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்.. நெகிழ்ச்சி வீடியோ!

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர். அதனால் ‘கல்லைக் கூட மிகச்சிறப்பாக நடிக்க வைக்கக்கூடியவர் பாரதிராஜா’ என்று அவரைப் பற்றி பெருமையாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் தன் மகனை அவரால் ஒரு வெற்றிகரமான நடிகராக உருவாக்க முடியவில்லை.

அப்பாவைப் போலவே இயக்குனர் ஆக்கவேண்டும் என்ற ஆசையில் இருந்த மகன் மனோஜைக் கட்டாயப்படுத்தி நடிகராக்கினார். அவரை பிரம்மாண்டமாக தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனாலும் அந்த படம் ப்ளாப் ஆனது. மனோஜால் நடிகராக பெரியளவில் சாதிக்க முடியாமலேயே போனது. அதே போல இயக்குனராக வேண்டும் என்ற அவரது ஆசை சமீபத்தில் நிறைவேறினாலும் அவரால் சொல்லிக்கொள்ளும்படி அந்த துறையில் சாதிக்க முடியவில்லை.

 

இந்நிலையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடல் நேற்று அஞ்சலிக்கு வைக்கப்பட்ட நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து நேற்று மாலை அவரது உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் பாரதிராஜாவை அவர் வீட்டுக்கு சென்று சந்தித்த இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரன் மகனை இழந்திருக்கும் அவரை தேற்றும் விதமாக பாடல் பாடியுள்ளார். பாரதிராஜா திரைக்கதையில் உருவான ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் இடம்பெற்ற ‘சிறு பொன்மனி அசையும் அதில் தெறிக்கும் இசையில்’ என்ற பாடலை பாடிக்காட்டி, பாடல் உருவான சூழல் குறித்தெல்லாம் பேசி பாரதிராஜாவை இயல்பு நிலைக்கு அழைத்து வர முயன்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

vinoth

Recent Posts

வரலாற்று சாதனை: தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளராக சாந்தி நியமனம்..! யார் இவர்..? இவருடைய பவர் என்ன..?

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…

3 minutes ago

யாரைக் காப்பாற்ற இந்த சதி..? மின்துறை 18 ஹார்ட் டிஸ்க்குகள்.. மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் இபிஎஸ்..!

மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…

6 minutes ago

₹840-க்கு சொல்லிவிட்டு ₹640-க்கு ஊழியர் செய்த ‘அந்த’ காரியம்.. செல்போன் பேசிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெட்ரோல் பங்கில் அரங்கேறிய நூதன மோசடி..!!

ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…

7 minutes ago

“எங்களை அவமானப்படுத்தவே கூப்பிட்டிருக்காங்க” மேயர் பிரியாவுக்கு எதிராகத் தவிக எம்.எல்.ஏ பல்லவி பரபரப்புக் குற்றச்சாட்டு..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…

20 minutes ago

“விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்… கடுப்பான திமுக” – ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை அதிரடியாக புறக்கணித்த ஸ்டாலின்..!!

நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…

22 minutes ago

லஞ்சப் பணத்திற்காக இப்படியா செய்வாங்க?.. சிறுமியின் காலை மீண்டும் உடைத்த டாக்டர்.. அரசு மருத்துவனையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…

23 minutes ago