Categories: சினிமா

ஒரே ஒரு வாழ்க்கை வரலாறாக வாழ வேண்டும்.. வீர தீர சூரன் வெற்றியால் சீயான் விக்ரம் வெளியிட்ட வீடியோ..!

Spread the love

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. படம் ரிலீஸ் ஆன 8 நாட்களில் இந்திய அளவில் மட்டும் சுமார் 30 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் 27ஆம் தேதி காலை திரைப்பட வெளியாக இருந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. சில பிரச்சனைகளால் படம் ரிலீஸ் ஆகாது என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர். படத்தை ரிலீஸ் செய்ய நான்கு வாரங்களுக்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் படம் ரிலீஸ் ஆகாது என்று ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

 

இப்படியான நிலையில் பிரச்சனையை தீர்க்க தன்னுடைய சம்பளத்தில் பாதியை விக்ரம் விட்டுக் கொடுத்தார். இதனை தொடர்ந்து ஒருவழியாக பிரச்சனை தீர்ந்து மார்ச் 27ஆம் தேதி மாலை திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தில் காளியாக விக்ரம் நடித்ததை பார்த்த ரசிகர்களுக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது. விக்ரம் எவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இப்படியான நிலையில் வீர தீர சூரன் திரைப்படத்தை பிளாக் பஸ்டர் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து விக்ரம் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஒரே ஒரு வாழ்க்கை, வரலாறாம் வாழ்ந்து விடனும் என்று ஒருத்தர் ஈசியா சொல்லிட்டு போயிட்டான். ஆனால் இந்த வாழ்க்கை இருக்கே அப்பா, ஏதாவது ஒரு பிரச்சனை ஏதாவது ஒரு கர்வ்வம் தூக்கி வீசுவது என நிறைய சந்திக்க வேண்டி இருக்கு. உதாரணத்திற்கு வீர தீர சூரன் திரைப்படம் ரிலீசுக்கு முன்னாடியே நிறைய பேர் பார்த்து இது ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆக போகிறது, அய்யய்யோ என்ன இப்படி ஒரு படமா இருக்கு, புதுசா இருக்கு, ராவா இருக்கு, மாசா இருக்கு. இந்த வருஷத்தின் மிகப்பெரிய படமாக அமையும் என்று சொல்லி எங்கள் அனைவரையும் வந்து மிகவும் சந்தோஷப்பட வச்சுட்டு போயிட்டாங்க.

ஆனால் சட்ட பிரச்சனைகள் வந்து படத்தை நான்கு வாரம் ரிலீஸ் பண்ண கூடாது என்று நீதிமன்றம் சொல்லுச்சு. என்னைப் பொறுத்தவரை இந்த திரைப்படம் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் போய் சேர வேண்டும் என்று நினைத்தேன். இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் அவ்வளவு முயற்சி போட்டு உள்ளோம். அவ்வளவு முயற்சி பண்ணி அது வராத பட்சத்தில் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. சினிமாவுக்கு நாம எது வேண்டுமானாலும் பண்ண தயார் என்பது அனைவருக்கும் தெரியும். இது எல்லாம் ஒரு விஷயமா என்று என்னால் என்ன பண்ண முடியுமோ அதை செய்து படம் வெளியே வந்துச்சு.

தியேட்டருக்கு வந்து பார்த்த ஒவ்வொரு தரும் இதுக்கு முன்னாடி என்ன சொன்னார்களோ அதைவிட நன்றாகவே பாராட்டினார்கள். இதையெல்லாம் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. அதை நினைத்துப் பார்க்கும்போது எனக்கு நன்றி மட்டும்தான் சொல்ல தோணுது. உங்களுக்கு நன்றி சொல்லணும். இந்தப் படம் உங்களுக்காக பண்ண படம். நாங்க நினைச்சது நடந்துருச்சு. சேர வேண்டிய இடத்தில் சேர்த்துட்டு இருக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. படம் பார்த்தவங்க அனைவரும் என்ஜாய் பண்ணியிருப்பீங்க. இதுவரை பார்க்காதவங்களும் படம் பார்ப்பீங்க என்று நம்புகிறேன் என விக்ரம் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Nanthini

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

9 minutes ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

12 minutes ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

16 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

18 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

31 minutes ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

34 minutes ago