பாக்கியராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ஞானப்பழம் என்ற திரைப்படம் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமானவர்தான் பா விஜய். அதன் பிறகு வேட்டிய மடிச்சு கட்டு, நீ வருவாய் என உள்ளிட்ட படங்களுக்கு பாடல் எழுதிய இவர் 2000 ஆம் ஆண்டு 9 படங்களுக்கு பாடல் எழுதி இருந்தார். இதில் ஒரு படம்தான் வானத்தைப்போல. குடும்ப படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் விக்ரமன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடன் இணைந்து மீனா, கௌசல்யா, லிவிங்ஸ்டன், பிரபுதேவா மற்றும் செந்தில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர்.
எஸ் ஏ ராஜ்குமார் இசை அமைத்த இந்த திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் படமும் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் எட்டு பாடல்கள் இடம் பெற்று இருந்த நிலையில் அதில் ஆறு பாடல்களை பா விஜய் எழுதியிருந்தார். அதில் குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து பாடும் ஒரு பாடல் தான் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடல். இந்த பாடல் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள பாடல் ஆசிரியர் பா. விஜய், வெட்கமண்ட் சாரிடம் பாடல் எழுத வேண்டும் என்றால் கண்ணில் இருந்து ரத்தம் வரும். வானத்தைப்போல படத்தில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடலுக்காக 100 பல்லவிகளை எழுதிக் கொடுத்தேன்.
பல்லவி மற்றும் சரணம் அடங்கிய புத்தகத்தை அவரிடம் 20 — 20 ஆக கொடுப்போம். வேறு ஏதாவது இருக்கா என்று அனைத்தையும் படித்து விட்டு அமைதியாக கேட்பார். எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலுக்காக 50 பல்லவி மற்றும் 100 சரணம் எழுதிக் கொடுத்தேன். அத படிக்கிறதுக்கே ரொம்ப டைம் ஆகும். அதில் நிறைய வரிகள் நன்றாக இருந்தாலும் அவரை பொறுத்தவரை ஒரு பயணம் செய்து கொண்டிருக்கும் போது அதில் கேட்கும் நபர் பாடலில் வரிகளை ரசிக்க கூடியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அந்த அளவிற்கு அற்புதமாக பாடல்களை செதுக்க கூடியவர். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்கு ஆசான் பாக்யராஜ் என்றால் அடுத்த குரு என்றால் அது விக்ரமன்சார் தான். அவர்தான் என்னை ஒரு பாடல் ஆசிரியராக செதுக்கினார் என்று விக்ரமன் குறித்து பேசி உள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…