ஜாகீராபாத் நகரில் உள்ள ஜெய் பவானி நகைக்கடையில், சனிக்கிழமை நான்கு பெண்கள் புர்கா அணிந்து வாடிக்கையாளர்களைப் போல் நுழைந்துள்ளனர். அவர்களுடன் தொப்பி அணிந்த ஒரு நபரும் வந்துள்ளார். மூக்குத்தி மாடல்களைக் காட்டுமாறு கட ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.
ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, சுமார் 70 கிராம் எடையுள்ள தங்க மாலையை திருடிக் கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் நகையைக் காணாததால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் இந்தத் திருட்டுச் சம்பவம் தெரியவந்தது.
https://twitter.com/HateDetectors/status/2089684235376349675/video/1
இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து, மாயமான நபர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
