Categories: சினிமா

ரஹ்மான் இசையில் உருவான இந்த சூப்பர் ஹிட் பாடல்களை எல்லாம் பாடியது ஜி வி பிரகாஷா?… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

Spread the love

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜி வி பிரகாஷும், சைந்தவியும் பள்ளிக் காலம் முதலே நண்பர்கள். ஜி வி இசையமைப்பாளராக ஆனதும் சைந்தவிக்கு அதிக பாடல்களைக் கொடுத்தார்.

அதிலிருந்து வெளிவந்து இப்போது இருவருமே தங்கள் தனிவாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் கவனம் செலுத்துகின்றனர். ஜி வி பிரகாஷ் தன்னுடைய 17 ஆவது வயதிலேயே வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற சில பாடல்களை எப்படி அவர் அவ்வளவு சின்ன வயதில் இசையமைத்திருப்பார் என ஆச்சர்யப்பட்டனர்.

அந்த படத்தில் இடம்பெற்ற ‘உருகுதே மருகுதே’, ‘வெயிலோடு உறவாடி’ போன்ற பாடல்கள் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. இந்த படத்தின் வெற்றியாலும் பாடல்கள் பெற்ற கவனத்தாலும் ஒரே படத்தில் முன்னணி இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார். அதன் பின்னர் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராக 25 படங்களிலும் நடித்துள்ளார்.

ஜி வி பிரகாஷ் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக இல்லை என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அவர் தன்னுடைய 5 வயதிலேயே ஒரு பாடகராகதான் அறிமுகமானார். ரஹ்மான் இசையில் உருவான சிக்குபுக்கு ரயிலே பாடலில் ஆரம்பத்தில் வரும் சிறுவனின் குரல் ஜி வி பிரகாஷுடையதுதானாம்.

அதே போல பம்பாய் படத்தில் இடம்பெற்ற குச்சி குச்சி ராக்கம்மா பாடலும், முத்து படத்தில் இடம்பெறும் குலுவாலில்லே பாடலிலும் அவர் பாடியுள்ளார். அதே போல மேமாதம் படத்தில் வரும் ‘ஆடிப்பாரு மங்காத்தா’ மற்றும் ‘பாலக்காட்டு மச்சானுக்கு ‘ ஆகிய இரு பாடல்களிலும் அவர் ஒரு பகுதியைப் பாடியுள்ளார்.

இது தவிர அஜித்தின் ஆசை, ஷங்கரின் முதல்வன் மற்றும் அந்நியன் இந்திரா படத்தில் இனி அச்சமில்லை ஆகிய பாடல்களிலும் சிறுவனாக இருக்கும்போதே ஜி வி பிரகாஷ் பாடியுள்ளார் என்பது பலரும் அறியாதது.

vinoth

Recent Posts

“விஜய்க்கு வந்த பாதுகாப்பு திடீரென வாபஸ்?”… நீலாங்கரையில் நடந்தது என்ன?… கொளத்தூர் எம்எல்ஏ சொன்ன பகீர் உண்மை…!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியலில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக…

1 minute ago

“யாரும் எதிர்பார்க்காத ‘ட்விஸ்ட்’… விஜய் பக்கம் சாயும் 40 எம்.எல்.க்கள்?… சி.வி.சண்முகம் கொடுத்த மெகா ஷாக்.. திக்கித் திணறும் எடப்பாடி… பரபரக்கும் அரசியல் களம்”…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஒரு தொங்கு சட்டசபை உருவானதால் அரசியல் களம் அதிரடி…

7 minutes ago

“கஷ்டப்பட்டா சாமி காப்பாத்தும்” – கதறி அழுத தொண்டர்… அடுத்த நொடியே விஜய்க்கு வந்த குட் நியூஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் தேர்தலிலேயே…

9 minutes ago

“பாதியிலேயே நின்ற 100-வது படக் கனவு!… ஆர்.பி. சௌத்ரியின் மறைவால் நிலைகுலைந்த ரஜினிகாந்த்… கண்ணீரில் நனைந்த திரையுலகம்”..!!!

தமிழ் திரையுலகின் பிதாமகன் என்று போற்றப்படும் முன்னணி தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மறைவு ஒட்டுமொத்த சினிமா துறையையும் நிலைகுலையச் செய்துள்ளது.…

20 minutes ago

“அவ்வளவு தான் சோலி முடிஞ்சு..செங்ஸால் Trigger ஆன எடப்பாடி”… செம கடுப்பான திமுக… பாஜகவுக்கு இப்படி ஒரு சிக்கலா…?

தமிழக அரசியலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் அரசியல் சதுரங்க வேட்டையைத் துவக்கி…

26 minutes ago

BIG BREAKING: முதல்வராகிறார் விஜய்… ஆளுநர் கொடுத்த க்ரீன் சிக்னல்… கோட்டையை நோக்கி தளபதி…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை கிண்டியில் உள்ள…

36 minutes ago