CINEMA
ரஹ்மான் இசையில் உருவான இந்த சூப்பர் ஹிட் பாடல்களை எல்லாம் பாடியது ஜி வி பிரகாஷா?… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜி வி பிரகாஷும், சைந்தவியும் பள்ளிக் காலம் முதலே நண்பர்கள். ஜி வி இசையமைப்பாளராக ஆனதும் சைந்தவிக்கு அதிக பாடல்களைக் கொடுத்தார்.
அதிலிருந்து வெளிவந்து இப்போது இருவருமே தங்கள் தனிவாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் கவனம் செலுத்துகின்றனர். ஜி வி பிரகாஷ் தன்னுடைய 17 ஆவது வயதிலேயே வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற சில பாடல்களை எப்படி அவர் அவ்வளவு சின்ன வயதில் இசையமைத்திருப்பார் என ஆச்சர்யப்பட்டனர்.
அந்த படத்தில் இடம்பெற்ற ‘உருகுதே மருகுதே’, ‘வெயிலோடு உறவாடி’ போன்ற பாடல்கள் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. இந்த படத்தின் வெற்றியாலும் பாடல்கள் பெற்ற கவனத்தாலும் ஒரே படத்தில் முன்னணி இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார். அதன் பின்னர் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராக 25 படங்களிலும் நடித்துள்ளார்.
ஜி வி பிரகாஷ் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக இல்லை என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அவர் தன்னுடைய 5 வயதிலேயே ஒரு பாடகராகதான் அறிமுகமானார். ரஹ்மான் இசையில் உருவான சிக்குபுக்கு ரயிலே பாடலில் ஆரம்பத்தில் வரும் சிறுவனின் குரல் ஜி வி பிரகாஷுடையதுதானாம்.
அதே போல பம்பாய் படத்தில் இடம்பெற்ற குச்சி குச்சி ராக்கம்மா பாடலும், முத்து படத்தில் இடம்பெறும் குலுவாலில்லே பாடலிலும் அவர் பாடியுள்ளார். அதே போல மேமாதம் படத்தில் வரும் ‘ஆடிப்பாரு மங்காத்தா’ மற்றும் ‘பாலக்காட்டு மச்சானுக்கு ‘ ஆகிய இரு பாடல்களிலும் அவர் ஒரு பகுதியைப் பாடியுள்ளார்.
இது தவிர அஜித்தின் ஆசை, ஷங்கரின் முதல்வன் மற்றும் அந்நியன் இந்திரா படத்தில் இனி அச்சமில்லை ஆகிய பாடல்களிலும் சிறுவனாக இருக்கும்போதே ஜி வி பிரகாஷ் பாடியுள்ளார் என்பது பலரும் அறியாதது.