CINEMA
அடிச்சா திருப்பி அடிக்கனும்.. சார்பட்டா பரம்பரைல வர அந்த கேரக்டர் என் குடும்பத்துல இருக்கு.. பா.ரஞ்சித் ஓபன் டாக்..!!
பிரபல இயக்குனரான பா. ரஞ்சித் கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீசான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி ரஞ்சித்துக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கபாலி திரைப்படத்தை ரஞ்சித் இயக்கியனார்.
கடைசியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் படமும் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 2021-ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பா. ரஞ்சித் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, சார்பேட்டா பரம்பரையில கபிலன் மனைவியா வந்த அந்த மாரியம்மாள் கேரக்டர் அப்படியே எங்க அத்தை பொண்ணு தான். நான் எப்ப போனாலும் அந்த பொண்ணு எல்லாரையும் ஹேண்டில் பண்ற விதம் அப்படி இருக்கும். என் தம்பி தான் அத்தை பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கான். அந்த பொண்ணு அவ புருஷனை திட்டுவாங்க. என்ன திட்டுவாங்க. எங்க அப்பாவையும் திட்டுவாங்க.
அவங்க என் அத்தை பொண்ணு. எங்ககிட்ட அவ்வளவு உரிமை எடுத்துக்கிட்டு சண்டை போடுவாங்க. இதெல்லாம் தான் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு. அதனால அந்த கதை பாத்திரங்களை என்னுடைய திரைப்படத்தில் பயன்படுத்திக்க நாம் முடிவு பண்ணேன். நான் பார்த்த பெண்கள் இவங்கதான். இவங்க மற்ற பெண்கள் மாதிரி கிடையாது. அடிச்சா திருப்பி அடிக்கிற பொண்ணுங்கள தான் நான் பார்த்திருக்கேன். திட்டினால் திருப்பி சண்டை போடுற பொண்ணுங்கள தான் நான் பார்த்து இருக்கேன் என கூறியுள்ளார்.