உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் இருந்து குப்த்காஷிக்கு சென்ற ஹெலிகாப்டர் ஒரு காட்டில் விபத்துக்குள்ளானதில் லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) ராஜ்வீர் சவுகான் மற்றும் அதில் இருந்த ஆறு பேர் உயிரிழந்தனர். அதிகாலை 5:20 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. இந்த ஹெலிகாப்டரில் ஆறு பேர் பயணித்தனர் – ஆறு யாத்ரீகர்கள் மற்றும் ஒரு விமானி என உத்தரகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் (UCADA) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கருகி உயிரிழந்தனர்.
இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகான் இறுதிச் சடங்கு இன்று காலை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அவரது மனைவி லெப்டினன்ட் கர்னல் தீபிகா சவுகான், ராணுவ சீருடையில் தனது கணவருக்கு இறுதிச் சடங்கு செய்தார். உயிரிழந்த தனது கணவர் ராஜ்வீர் சிங் சவுகான் உடலுக்கு அவரது மனைவி ராணுவ சீருடையில் கண்ணீர் மல்க இறுதிச் சடங்கு செய்த காட்சி காண்போரை கலங்கச் செய்துள்ளது. ராஜ்வீர் சிங்கின் மனைவி தீபிகா சவுகான் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…