பனிப்பெண் டூ மந்திரி!.. மேற்கு வங்கத்தை அதிரவைத்த ‘கலீதா மாஜி’.. இந்தியாவையே உலுக்கிய நிஜ ‘நெற்றிக்கண்’ கதை..!!

Spread the love

மேற்குவங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, ஆஸ்கிராம் சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 37 வயதான கலிதா மாஜி என்ற எளிய பெண்மணி புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளரை 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த இவருக்கு, தன் தொகுதி மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உள்ளது.

2006-ம் ஆண்டு பிளம்பர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட கலிதா மாஜி, கடந்த பல ஆண்டுகளாகக் குஸ்காரா பகுதியில் மாதத்திற்கு 4,000 ரூபாய் சம்பளத்தில் வீட்டு வேலைக்காரியாகப் பணிபுரிந்து, சமையல் மற்றும் தூய்மைப் பணிகளைச் செய்து வந்துள்ளார். வறுமையான சூழலிலும் தனது பணிகளைச் செய்துகொண்டே பாஜகவின் அனைத்துக் கட்சி நிகழ்ச்சிகளிலும் தீவிரமாகப் பங்கேற்று வந்த இவர், பிரதமர் மோடியே தனது அரசியல் பயணத்திற்குப் பெரும் உத்வேகமாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அமைச்சராகப் பதவியேற்ற பின் பேசிய கலிதா மாஜி, பின்தங்கிய மக்களுக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்குவது மற்றும் தனது தொகுதியில் ஒரு புதிய மருத்துவமனையைக் கட்டுவதே தனது முதல் பணி என்று கூறியுள்ளார். மேலும், பள்ளி, கல்லூரி மாணவிகள் காடுகளைக் கடந்து செல்லும்போது சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, ஒரு சாதாரண வீட்டுப் பணியாளராலும் அரசியல்வாதியாக முடியும் என்பதை நிரூபித்துள்ள தனது பாஜக அரசு, தன்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும், ஊழலற்ற ஆட்சிக்காகவும் பாடுபடும் என உறுதியளித்துள்ளார்.

Muthu Mani

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

8 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago