இனிமேல் தான் என் கேம் ஸ்டார்ட் ஆகப்போகிறது. பிக் பாஸ் தினேஷ் வெளியிட்ட முதல் வீடியோ

By Deepika on தை 18, 2024

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் தினேஷ்  முதல் முறையாக வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ்  சீசன் 7. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன்  வழங்கிவருகிறார். இந்நிலையில் இதில்   24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதன் பைனல் கடந்த 14 ஆம் தேதியன்று கோலாகலமாக நடைபெற்றது.

   

இந்த சீசனில் அர்ச்சனா,தினேஷ், பிராவோ,கானா பாலா போன்றவர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தனர்.இதில்  வைல்ட் கார்ட் போட்டியாளரான அர்ச்சனா  வெற்றி பெற்றார். மணி ரன்னராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் நான்காவது இடத்தை தினேஷ் பிடித்தார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தினேஷ் முதல் முறையாக வீடியோ பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

   

இதில் அவர் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பல கனவுகளுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பார்கள்.தனக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கும் பிக் பாஸ்  குழுவினருக்கும், ரசிகர்களுக்கும், மக்களாகிய உங்களுக்கும்   தனது நன்றியை தெரிவிகிறேன் . நாங்கள் இந்த நிகழ்ச்சியை உங்களை மகிழ்விக்கும் விதத்தில்  கொண்டு சென்றுள்ளோம் என நம்புகிறேன்.ஒரு சில சமூக ஊடகங்கள் எங்களின் பாசிடிவ்வான விசயங்களை எடுத்து சொல்லியிருந்தீர்கள் அதற்க்கு ரொம்ப நன்றி என்றும் கூறினார்.

 

நான் இந்த நிகழ்ச்சிக்குள் செல்லும் போது பல எதிர்பார்ப்புகளுடன் சென்றேன்,வெளியே வரும்போது ஒருசில ஏமாற்றங்களுடன் வந்தேன்எனக்கு கமல் சார் கையால் கேம் சென்ஜெர் என்ற விருது வழங்கப்பட்டது. கேம் சென்ஜெர் என்பது ஒரு சாதாரண விசயம் கிடையாது.   அது எனக்கு   கொடுக்கப்பட்டது பெருமையாக இருந்தது. எனது வாழ்க்கையில்  எனக்கு சவால்கள்  கலந்த  வாழ்க்கையாக இருந்தது. என் வாழ்க்கையில் அதனை மாற்றியமைத்த  கேம் சென்ஜெர் என்றால் அது மக்களாகிய நீங்கள் தான். பிக் பாஸ்க்கு  பிறகு எனது கேம்  ஆரம்பமாகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Dinesh Gopalsamy (@dineshgopalsamy)