புனேவைச் சேர்ந்த மிஹிர் கஹுகர் மற்றும் அவரது நண்பர் அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத விதமாகத் தங்கள் வீட்டு பால்கனியில் சிக்கிக்கொண்டனர். பால்கனி கதவு தானாக வெளிப்பக்கமாகப் பூட்டிக்கொண்ட நிலையில், உள்ளே அவரது பெற்றோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்களை எழுப்பினால் திட்டு விழுமே என்ற பயத்தில், யாரிடமும் உதவி கோர முடியாமல் தவித்த மிஹிர், ஒரு சமயோசித முடிவை எடுத்தார். பிளிங்கிட் (Blinkit) செயலியைப் பயன்படுத்தி சில பொருட்களை ஆர்டர் செய்து, அதன் மூலம் உதவி பெறத் திட்டமிட்டார்.
View this post on Instagram
ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே டெலிவரி ஊழியர் வீட்டிற்கு வர, பால்கனியில் இருந்து மிஹிர் தனது இக்கட்டான சூழலை அவருக்கு விளக்கினார். அந்த ஊழியரும் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு, சத்தம் எழுப்பாமல் பிரதான கதவைத் திறந்து உள்ளே வந்து பால்கனி கதவைத் திறந்து அவர்களை மீட்டார். பெற்றோரை எழுப்பாமல் சமயோசித புத்தியால் தப்பித்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
