வெளியூரில் இருப்போருக்கு குட் நியூஸ்..! பொங்கல் பரிசு பணம்.. தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!

By Soundarya on தை 8, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹3000 பொங்கல் பரிசுத் தொகை இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயோமெட்ரிக் (கைரேகை) பதிவு செய்து இந்தத் தொகையைப் பெற முடியும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. இந்நிலையில், வேலை அல்லது கல்வி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்கள் இந்தப் பரிசைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுந்தது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மூர்த்தி, வெளியூரில் இருப்பவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்து தாமதமாக வந்தாலும், எவ்வித இடையூறுமின்றி ரேஷன் கடைகளில் தங்களது பொங்கல் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று உறுதியளித்துள்ளார். தகுதியுள்ள அனைவருக்கும் இந்தப் பரிசுத் தொகை சென்றடைவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.