“6:01 மணிக்கு ஆபீஸ் காலி…” இத்தாலி பணி சூழலால் மிரண்டு போன இந்திய பெண்.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு…!!

By Devi Ramu on தை 8, 2026

Spread the love

இத்தாலியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் சேர்ந்த ஜோதி என்ற இந்தியப் பெண், அங்குள்ள பணிச் சூழல் குறித்துப் பகிர்ந்துள்ள அனுபவங்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. இந்தியாவில் வேலை நேரம் முடிந்த பிறகும் பணி தொடர்பான அழுத்தங்கள் இருக்கும் நிலையில், இத்தாலியில் மாலை 6:01 மணிக்கே அலுவலகம் முழுமையாகக் காலியாகிவிடுவதைக் கண்டு அவர் வியப்படைந்துள்ளார். அங்கு பணி நேரம் முடிந்த பிறகு ஊழியர்களைத் தொடர்பு கொள்வது ஒரு குற்றமாகவே பார்க்கப்படுவதாகவும், உயர் அதிகாரிகளைப் பெயர் சொல்லி அழைக்கும் சமத்துவ முறை நிலவுவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும், அலுவலக இடைவேளைகளின் போது வேலை பற்றிப் பேசுவது அங்குத் தவிர்க்கப்படுவதோடு, சக ஊழியர்களுடனான உறவை மேம்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வேலையில் தவறு செய்தாலும் அதைக் கற்றலுக்கான வாய்ப்பாகக் கருதி ஊக்கப்படுத்தும் மேலாளர்கள், வார இறுதி நாட்களில் ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஊழியர்களை இயந்திரங்களாகப் பார்க்காமல் மனிதர்களாக மதிக்கும் இத்தாலியின் இந்த ஒர்க் கல்ச்சர் இந்திய ஐடி ஊழியர்களிடையே பெரும் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.