“டெலிவரி செய்ய வந்த இடத்தில் இப்படியா?”… சாப்பாடு கொடுக்கப் போன ஊழியரை தோளில் தூக்கிக் கொண்டாடிய நண்பர்கள்… வைரலாகும் டெல்லி சம்பவம்..!!!

Spread the love

டெல்லியில் உள்ள ஒரு குடியிருப்பில் நண்பர்கள் குழுவாக இணைந்து உணவு ஆர்டர் செய்து பார்ட்டி கொண்டாடிக்கொண்டிருந்தனர். உணவை டெலிவரி செய்ய வந்த இளைஞர், தனது பணியை முடித்துவிட்டு கிளம்பத் தயாரானபோது, அங்கிருந்த இளைஞர்கள் அவரை அன்புடன் தடுத்து நிறுத்தி தங்களது கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்தனர்.

மேலும் முதலில் அவர் தயக்கத்துடன் இதை ஒரு கிண்டல் என்று நினைத்தாலும், அவர்களின் விடாப்பிடியான அன்பும் வற்புறுத்தலும் அவரை நெகிழச் செய்தது. அந்த நேரத்தில் ‘துரந்தர்’ திரைப்படத்தின் உற்சாகமான பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உற்சாகப்படுத்தி ஆட வைத்தனர். ஆரம்பத்தில் கூச்சப்பட்ட அந்த டெலிவரி ஊழியர், அந்த நண்பர்களின் எதார்த்தமான அன்பால் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

இதனால் ஒரு கட்டத்தில் நண்பர்கள் அவரைத் தங்கள் தோள்களில் தூக்கி வைத்துக் கொண்டாட, அந்த இடமே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது. அந்நியர் என்ற பாகுபாடின்றி ஒரு உழைப்பாளியைத் தங்கள் மகிழ்ச்சியில் பங்கெடுக்கச் செய்த அந்த இளைஞர்களின் செயல் அனைவரின் மனதையும் தொட்டது. சிறிது நேரம் உற்சாகமாக நடனமாடிவிட்டு, புன்னகையுடன் விடைபெற்ற அந்த இளைஞர், மீண்டும் தனது பணிகளைத் தொடர அங்கிருந்து கிளம்பினார். மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

Rajeshwari

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

3 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

3 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

3 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

3 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

3 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

3 மணத்தியாலங்கள் ago