உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரில் கடனா…? ஆதார் வரலாற்றை உடனே செக் பண்ணுங்க… மோசடியை தவிர்க்க ஈஸி டிப்ஸ்…!!

Spread the love

ஆதார் அட்டை தற்போது வங்கிப் பரிவர்த்தனை முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்தச் சூழலில், தனிநபர்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களின் ஆதார் எண்களைப் பயன்படுத்தி கடன் வாங்குவது போன்ற முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன.

உங்களின் ஆதார் விவரங்கள் எங்கு, எப்போது பயன்படுத்தப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்ள UIDAI தளம் ‘ஆதார் அங்கீகார வரலாறு’ (Aadhaar Authentication History) என்ற வசதியை வழங்குகிறது. இதன் மூலம் கடந்த காலப் பயன்பாட்டுப் பதிவுகளைச் சரிபார்த்து, அதில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய மாற்றங்கள் இருந்தால் உடனடியாகக் கண்டறிய முடியும்.

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் எண் பயன்படுத்தப்பட்டிருந்தால், காலதாமதம் செய்யாமல் 1947 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும். மேலும், அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி அல்லது இணையதளம் வாயிலாகவும் உங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம்.

கூடுதல் பாதுகாப்பிற்காக உங்கள் ‘பயோமெட்ரிக்’ தகவல்களை இணையதளம் மூலம் லாக்  செய்து வைப்பதன் மூலம் தேவையற்ற மோசடிகளை முற்றிலுமாகத் தவிர்க்க முடியும். ஆதார் விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் நிதி இழப்புகள் மற்றும் அடையாளத் திருட்டுகளில் இருந்து நாம் தப்பிக்கலாம்.

Devi Ramu

Recent Posts

“4 ஆண்டு காதல்.. 17 இடங்களில் வெட்டு”… தேர்வு எழுத காத்திருந்தவருக்கு நடந்த கொடூரம்… பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்…!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சில்கல்குடா பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் யுவன், தனியார் கல்லூரியில் பொறியியல்…

1 minute ago

“232 பேர் ஓகே.. ஒரு ஆள் மட்டும் மிஸ்ஸிங்!”… சட்டமன்றத்தில் சி.வி. சண்முகம் செய்த அந்த ‘தனி’ காரியம்… பரபரப்பு பின்னணி…!!!

தமிழகத்தின் 16-வது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று தற்காலிக சபாநாயகர் எம்.வி. கருப்பையா முன்னிலையில் நடைபெற்றது. முதலமைச்சர் ஜோசப்…

2 minutes ago

மகளிருக்கு மாதம் ரூ.2,500… வந்தாச்சு சூப்பர் குட் நியூஸ்… முதல்வர் விஜய் வெளியிடப்போகும் அந்த ஒரு அறிவிப்பு…!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தவுடன் அரசுத் துறைகளின் நிதிநிலை குறித்த விரிவான தணிக்கை அறிக்கையைப் பரிசீலித்து, அதன் அடிப்படையில் 'மதிப்புமிகு…

5 minutes ago

காதலை வெளிப்படையாக உடைத்த திரிஷா… இன்ஸ்டா ஸ்டோரியை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்… கடைசில உண்மை வெளிவந்துடுச்சே…!

தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தற்போதைய பேசுபொருள் நடிகை திரிஷா தான். தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவில்…

11 minutes ago

தமிழகத்தில் 193 எம்.எல்.ஏக்கள் கோடீஸ்வரர்கள்… ஒருவரின் சராசரி சொத்தே இத்தனை கோடியா?.. டாப் லிஸ்டில் யார்?… அதிரவைக்கும் ADR அறிக்கை..!!!

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 224 எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR)…

13 minutes ago

“நள்ளிரவில் நடந்த அதிரடி மீட்பு”… ஆளுநர் மாளிகையில் சிக்கிய தவெக… என்ன நடந்தது அந்த 1 மணி நேரத்தில்..?

தமிழக அரசியலில் தற்போதைய சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் 'தவெக - அமமுக எம்.எல்.ஏ' விவகாரம், ஆட்சி அமைப்பதற்கான குதிரை…

16 minutes ago