தமிழக அரசியலில் தற்போதைய சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘தவெக – அமமுக எம்.எல்.ஏ’ விவகாரம், ஆட்சி அமைப்பதற்கான குதிரை பேர அரசியலை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கத் திணறி வரும் நிலையில், அமமுக எம்.எல்.ஏ. காமராஜிடம் ரகசியமாகக் கையெழுத்து பெற்ற விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஆளுநர் அர்லேகரிடம் விஜய் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் காமராஜின் பெயரும் இடம்பெற்றிருந்தது தான் இந்த சர்ச்சையின் தொடக்கப்புள்ளி. தன் கட்சி எம்.எல்.ஏ.வை காணவில்லை என்றும், அவர் தவெகவினரால் கடத்தப்பட்டு போலி கடிதம் பெறப்பட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் ஆளுநரிடம் புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினகரனின் புகாரைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் தலையிட்டு, உடனடியாக எம்.எல்.ஏ.வை மீட்க உத்தரவிட்டார். இதனையடுத்து டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தலைமையிலான உளவுத்துறை மற்றும் காவல்துறை தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது. அடுத்த ஒரு மணி நேரத்திலேயே, புதுச்சேரி ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் தங்கியிருந்த காமராஜ் கண்டறியப்பட்டார். போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் அங்கிருந்து வெளியே வந்த அவர், உடனடியாக சென்னை லோக் பவனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆளுநர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆளுநரிடம் காமராஜ் அளித்த வாக்குமூலம் தவெகவின் வியூகங்களை அம்பலப்படுத்தியுள்ளது. தன்னை தவெகவினர் அணுகி, “தவெக தான் ஆட்சி அமைக்கப்போகிறது, அதிமுகவால் முடியாது” என்று மூளைச்சலவை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், விஜய்யின் நட்பு மற்றும் எதிர்காலப் பலன்களைக் கூறி ஆசை காட்டியதாகவும், அந்த மயக்கத்தில் தான் அவர்கள் நீட்டிய கடிதத்தில் கையெழுத்திட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த ஒப்புதல் வாக்குமூலம் தவெகவிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. விசாரணைக்குப் பின், காமராஜ் முறைப்படி டிடிவி தினகரனிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தற்போது இந்த விவகாரம் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தவெகவை எதிர்க்க ஒரு வலுவான ஆயுதமாக மாறியுள்ளது. குதிரை பேரம் நடந்ததை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வே ஆளுநரிடம் ஒப்புக்கொண்டிருப்பதால், தவெக ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநருக்குப் போதிய இடமிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆளுநர் அர்லேகர் எடுக்கும் அடுத்தகட்ட முடிவைப் பொறுத்தே தமிழக அரசியலின் அடுத்த நகர்வு அமையும் என்பதால், லோக் பவன் வட்டாரத்தை அரசியல் கட்சிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த நபர்…
'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்களைக் கண்டறிய, எலுமிச்சைத் துண்டைப் பயன்படுத்தும்…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அவருக்கு மாதம்…
விலையுயர்ந்த கார்களில் மட்டுமே காணப்படும் 'சன்ரூஃப்' வசதியை, தனது எளிய ஆட்டோ ரிக்ஷாவிலேயே உருவாக்கித் தன் பிள்ளைகளை மகிழ்வித்த ஒரு…
அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. 30 எம்.எல்.ஏ-க்கள் இணைந்து சட்டமன்றக் கட்சித்…
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில், 22 வயதான பள்ளி உதவி ஆசிரியை ஒருவர் 8-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவருடன்…