தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சில்கல்குடா பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் யுவன், தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை பள்ளிப் பருவம் முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யுவனின் வீட்டிற்கே சென்று அவரது பெற்றோர் முன்னிலையில் அவரை அடித்து மிரட்டியுள்ளனர். இதனால் இருவரும் தற்காலிகமாகப் பேசாமல் இருந்த நிலையில், சமீபகாலமாக மீண்டும் பழகத் தொடங்கியுள்ளனர்.
பெண்ணின் குடும்பத்தினர் மீண்டும் மிரட்டியதால், “இனி யுவனிடம் பேசமாட்டேன்” என்று அந்தப் பெண் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், பாதுகாப்பு கருதி யுவனின் குடும்பத்தினர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜவஹர் நகர் பகுதிக்கு வாடகைக்கு குடிபெயர்ந்தனர். தற்போது கல்லூரியில் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், தேர்வுகள் முடிந்ததும் யுவனின் குடும்பத்தினர் திருப்பதிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். இந்தச் சூழலில்தான், யாரும் எதிர்பாராத விதமாக அந்தப் பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
தனது கடைசித் தேர்வுக்கு முந்தைய நாள் இரவு, வீட்டில் உணவருந்திவிட்டு யுவன் தனது நண்பர்களுடன் தெருவில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் யுவனை வழிமறித்து சரமாரியாகத் தாக்கியது. உடல் முழுவதும் 17 இடங்களில் கொடூரமாக வெட்டப்பட்ட யுவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த ஜவஹர் நகர் போலீசார், வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், யுவனை கொலை செய்தது ரேவதியின் உறவினர்கள் என்பது உறுதியானது. இது தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் இருவரைத் தேடி வருகின்றனர். இதற்கிடையில், எஞ்சியுள்ள குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி யுவனின் பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஒரு இளம் மாணவரின் உயிர் காதல் விவகாரத்தில் பறிபோனது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த நபர்…
'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்களைக் கண்டறிய, எலுமிச்சைத் துண்டைப் பயன்படுத்தும்…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அவருக்கு மாதம்…
விலையுயர்ந்த கார்களில் மட்டுமே காணப்படும் 'சன்ரூஃப்' வசதியை, தனது எளிய ஆட்டோ ரிக்ஷாவிலேயே உருவாக்கித் தன் பிள்ளைகளை மகிழ்வித்த ஒரு…
அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. 30 எம்.எல்.ஏ-க்கள் இணைந்து சட்டமன்றக் கட்சித்…
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில், 22 வயதான பள்ளி உதவி ஆசிரியை ஒருவர் 8-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவருடன்…