Categories: சினிமா

தடல்புடலாக ஆரம்பித்து இன்னும் ரிலீஸாகமல் இருக்கும் 4 படங்கள்… இதில் விஜய் சேதுபதி படமும் இருக்கு…

Spread the love

சினிமாவில் எந்த ஒரு படம் வெளியாகும் போது அந்த படம் அந்த இயக்குனர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷமாகவே இருக்கும். அது சிறிய பட்ஜெட் ஆனாலும் சரி பெரிய பட்ஜெட் ஆனாலும் சரி அவர்களுக்கு அது மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக தான் இருக்கும். பார்த்து பார்த்து ஒரு காவியமாக ஒவ்வொரு படத்தையும் உருவாக்குவார்கள். இயக்குனர்கள் அப்படி என்னதான் பார்த்து பார்த்து உருவாக்கினாலும் அதை ரிலீஸ் செய்வதற்கு பல தடைகள் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அது போன்று தமிழ் சினிமாவில் மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கப்பட்ட நான்கு படங்கள் பல வருடங்கள் ஆகியும் என்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அந்த படங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.

1. இடம் பொருள் ஏவல்

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் லிங்குசாமி தயாரிப்பில் விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் தான் இடம் பொருள் ஏவல். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும் இந்த படத்தின் டிரைலர் கூட வெளிவந்தது. ஆனால் தற்போது சில பண பிரச்சினை காரணமாக இந்த படம் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.

2. சுமோ

இயக்குனர் எஸ் பி ஓசிபின் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிர்ச்சி சிவா பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் சுமோ. காமெடி கலந்த படமாக உருவாகி இருக்கும் இந்த படம் கடந்த ஐந்து வருடங்களாக அண்டர் ப்ரொடக்ஷனில் இருந்து வருகிறது இன்னும் ரிலீசாகவில்லை.

3. துருவ நட்சத்திரம்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் ஐஸ்வர்யா ராஜேஷ் ரிதுவர்மா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தை கிட்டத்தட்ட 7 நாடுகளில் படமாக்கி இருக்கிறார்கள். 2017 இல் ஆரம்பித்த இந்த படமும் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது.

4. அக்னி சிறகுகள்

மூடர் கூடம் படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் அக்னி சிறகுகள். 2020 லாக்டவுன் நேரத்தில் போது ஷூட்டிங் முடித்திருக்கிறார்கள். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டதால் இந்த படமும் இன்னும் ரிலீசாகவில்லை.

admin

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

6 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

6 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

6 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago