ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் கங்காதர நெல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், இன்று அதிகாலை ஒரு தனியார் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூரு-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதியதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா ? அல்லது நண்பர்களா? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் தூக்கக் கலக்கமே விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் அந்த நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
