ஐதராபாத்தில் ராஜா சாப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கிளம்பும் போது நடிகை நிதி அகர்வால் கூட்ட நெரிசலில் ரசிகர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டார். அந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நடிகை நிதி அகர்வாலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது நடிகைகள் வெளியே வரும்போது கண்ணியமாக உடை அணிந்து வர வேண்டும் என சிவாஜி என்கிற தெலுங்கு நடிகர் கருத்து தெரிவித்திருந்தார். இது சர்ச்சை ஆனது. சர்ச்சைக்குப் பிறகு அவர் மன்னிப்பு கேட்டாலும், தான் சொன்ன கருத்தில் இருந்து மாறப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். அந்த சம்பவத்திற்கு பின் அமைதியாக இருந்து வந்த நடிகை நிதி அகர்வால் இப்போது மௌனம் கலைத்து பேசியிருக்கிறார்.
இன்று அவர் கோபமாக தன்னுடைய வலைதள பக்கத்தில் ‘பாதிக்கப்பட்டவரை குறை கூறுவது கையாலாகாத்தனம் என்று அழைக்கப்படுகிறது’ (பிளமிங் எ விக்டிம் ஈஸ் கால்டு மணிபுலேசன்) என்று பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் தன்னைப் பற்றி பேசியவர்களுக்கு நிதி அகர்வால் பதிலடி கொடுத்துள்ளார்.
