தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். இவர் நடித்த கடைசி படம் குட் பேட் அக்லி. இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக இது இருந்தது. ஆனால் அஜீத்குமார் அடுத்தடுத்த படங்களில் நடிக்காமல் கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இது அவரது ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.
இந்நிலையில் அஜீத்குமார் குறித்து பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி கூறியதாவது, அஜீத் குமாருக்கு விஜய் அளவுக்கு மார்க்கெட் இல்லை. அவர் படங்கள் பெரிய அளவில் வசூலும் இல்லை. அவர் 185 கோடி ரூபாய் சம்பளம் கேட்பது எல்லாம் நியாயமே இல்லை என்று அஜீத்குமாரை மிகக் கடுமையாக பிஸ்மி விமர்சித்துள்ளார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் தனது 64வது படத்தில் அடுத்த ஆண்டில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
