35 லட்சம் அவுட்…! பிரபல நிறுவனத்தின் பெயரிலேயே போலி ஆவணங்கள்…? இவ்வளவு பெரிய மோசடியா…?! தம்பதி உட்பட 4 பேர் கைது…! சென்னையில் பரபரப்பு…!!

By Swetha on ஆனி 24, 2026

Spread the love

சென்னையில் தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.35 லட்சம் மோசடி செய்த தம்பதி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, பிற நிறுவனங்களிடம் இருந்து பொருட்களைப் பெற்று இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அம்பத்தூரை அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகீம் (40) மற்றும் அவரது மனைவி உட்பட 4 பேருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

   

கைது செய்யப்பட்ட அப்துல் ரகீம் இதற்கு முன்பும் இதே போன்ற பல்வேறு மோசடி குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே சைபர் கிரைம் போலீசாரால் இரண்டு முறை கைது செய்யப்பட்டவர் என்ற அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.