“அமமுக கூடாரம் காலி.. ஒரே நாளில் 80+ நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்”… தினகரன் தலையில் இடியை இறக்கிய ஸ்டாலின்…!

Spread the love

அமமுக மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி.பார்த்திபன் மற்றும் 80-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியில் இணைந்தனர். சோளிங்கர் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தியே இந்த அதிரடி அரசியல் மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதற்காகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களில் என்.ஜி.பார்த்திபனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்த நிலையில், சோளிங்கர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. முன்னதாகவே அத்தொகுதியின் வேட்பாளராகப் பார்த்திபனை தினகரன் அறிவித்திருந்த நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அந்தத் தொகுதி கைநழுவிப் போனது பார்த்திபனிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், அமமுகவிலிருந்து விலகும் முடிவை எடுத்து தற்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.

இந்த இணைப்பு விழாவின் போது, அமமுக மாநில தேர்தல் பிரிவு செயலாளர் மற்றும் செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.கோதண்டபாணி (Ex.MLA), மாநில இளம்பெண்கள் பாசறை செயலாளர் என்.ஷோபனா நடராஜன் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மேலும், மாவட்ட அவைத்தலைவர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகர மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் என ஒரு பெரும் படையே அண்ணா அறிவாலயத்தில் அணிவகுத்தது. குறிப்பாக நெமிலி, சோளிங்கர், அரக்கோணம் மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள முக்கியப் பொறுப்பாளர்கள் திமுகவுக்குத் தாவியுள்ளனர்.

அமமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வழக்கறிஞர் பிரிவு, மாணவர் அணி என அனைத்து மட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள் திமுகவில் இணைந்திருப்பது, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட அரசியல் களத்தில் அமமுகவுக்குப் பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தேர்தல் நெருங்கும் வேளையில் திமுகவின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Nanthini

Recent Posts

“விஜய்யை அன்ஃபாலோ செய்தாரா த்ரிஷா..? தீயாய் பரவும் பிரேக்-அப் வதந்தி… இன்ஸ்டாகிராமில் வெடித்த ‘மர்ம’ உண்மை…!!”

நடிகர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததும், அவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக எழுந்த வதந்திகளும்…

6 minutes ago

“சார்… பேட்டரி சார்ஜ் செய்ய காசு இல்ல” கையேந்தி பிச்சை எடுக்கும் ரோபோ… சீனத் தெருக்களில் நடந்த பகீர் கூத்து..!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத் தெருக்களில் மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட 'ஹியூமனாய்டு' ரோபோ ஒன்று மண்டியிட்டு, கைகளைக் கூப்பி பிச்சை…

7 minutes ago

“‘உங்க குடும்பத்தை ஏன் சார் நடுத்தெருவுல விட்டீங்க..? விஜய் கொடுத்த அடியில் ஆடிப்போன திமுக… குடும்ப விஷயத்தை கையிலெடுத்த திமுக.. வெடிக்கும் தமிழக அரசியல்..!!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் "டாஸ்மாக் கட்சி நிதி" எனக் குறிப்பிட்டதாகக் கூறி திமுக…

11 minutes ago

பெற்றோர்கள் மகிழ்ச்சி… அரசு மருத்துவமனையில்.. குழந்தை பிறந்தால் 1 கிராம் தங்கம்… தவெக அரசின் ‘தாய்மாமன்’ திட்டம்… யாருக்கெல்லாம் கிடைக்கும்…? முழு விவரம் உள்ளே…!

தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…

21 minutes ago

உங்க உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்… ஆதாரம் இருந்தா நிரூபிங்க… தவெகவிற்கு சேகர் பாபு சவால்..!!

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்…

24 minutes ago

மீண்டும் வருகிறது 1997 பேரழிவு..? “தலைகீழாக மாறப்போகும் உலக வானிலை” பசிபிக் பெருங்கடலில் நாசா கண்டறிந்த ஆபத்து..!!

பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் 'Sentinel-6' செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது 'சூப்பர்…

28 minutes ago