சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்திபன், தற்போது அந்தத் தொகுதி பாமக-விற்கு ஒதுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் உள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் இந்தத் திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த அவர், தனது அரசியல் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க சோளிங்கர் பகுதியில் உள்ள தனது ஆதரவாளர்கள் 2,000-க்கும் மேற்பட்டோருடன் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்தும், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதி மாற்றப்பட்டது தன்னை அவமதிக்கும் செயல் என கருதும் பார்த்திபன், அமமுகவிலேயே நீடிப்பதா அல்லது மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தனது முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
