BREAKING: பாலியல் புகார்… அண்ணா பல்கலை. பேராசிரியர் கைது… சற்றுமுன் பரபரப்பு…..!

By Nanthini on பங்குனி 27, 2026

Spread the love

அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஞானவேல் பாபு, மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் திருநெல்வேலியில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து அவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டிருந்த நிலையில், குற்றச்சாட்டின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் தொடர் போராட்டங்கள் காரணமாகவும் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2024-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு பேராசிரியர் இது போன்ற புகாரில் சிக்கி கைதாகியுள்ளது கல்வி வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கியுள்ளது.