தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு அதிமுக மற்றும் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாகவே மாறியுள்ளார். அதே சமயம் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ அவர் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதேசமயம் அவருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக சமீபத்தில் செங்கோட்டையன் இணைந்த நிலையில் நேற்று நாஞ்சில் விஜயன் கட்சியின் இணைந்தார். இதனால் விஜய்க்கு நாளுக்கு நாள் பலம் கூடிக் கொண்டே செல்கிறது.
இப்படியான நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய போவதாக தகவல் பரவி வந்தது. இது குறித்து தனியார் சேனலுக்கு பேட்டியளித்த அவர், இந்த தகவல் உண்மை இல்லை, நான் தமிழக வெற்றிக்காக கட்சியில் இணைய போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கட்சியில் முன்னாள் அமைச்சர்கள் பலர் இணைய போகிறார்கள் என்று செங்கோட்டையன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
