“ஒரு டிக்கெட் ரூ.80,000” இந்தியாவை குலுக்கிய இண்டிகோ பிரச்சினை… ரோபோ ஷங்கர் மகள் பரபரப்பு குற்றசாட்டு…!!

By Soundarya on மார்கழி 6, 2025

Spread the love

கடந்த சில நாட்களாக இண்டிகோவின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு தாமதமாகி வருவதால் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள். தொழில்நுட்ப சிக்கல்கள், வானிலை மற்றும் புதிய பணியாளர்கள் பட்டியல் விதிகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.

இந்நிலையில் வாரணாசியில் இண்டிகோ விமானம் கேன்சல் ஆனதால் அங்கு சிக்கிய ரோபோ சங்கர் மகள் , நம்பி வந்தோம். கடைசியில இண்டிகோ பிளைட் திடீர்னு கேன்சல் பண்ணிட்டாங்க. நாங்கனாலும் பரவாயில்ல வேற ஆப்சன் இருக்கு. சமாளிச்சிப்போம். இங்க நிறைய சீனியர் சிட்டிசன்ஸ் தான் இருக்காங்க. அவங்க என்ன பண்ணுவாங்களோ தெரியல்ல. சரி வேற பிளைட்ல போகலாம்னு பாத்தா, ரூ.4000 டிக்கெட் ரூ.80,000-னு போட்டுருக்காங்க என்று வேதனை தெரிவித்துள்ளார்.