திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு என்ற பெயரில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். தீபம் ஏற்ற அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் ஓட்டுக்காக அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் தற்போது தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் டிசம்பர் 7 நாளை போராட்டம் நடத்த உள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் நாளை போராட்டம் பெரிய அளவில் வெடிக்கப் போகிறது.
