செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுகவிலிருந்து விலகும் முன்னாள் அமைச்சர்?…. சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்…!

By Nanthini on மார்கழி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவிலிருந்து ஈபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக செங்கோட்டையன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் செங்கோட்டை அணை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதிமுக பொதுக்குழுவில் 13வது தீர்மானம் வாசிக்கப்பட்டபோது அதை முன்வைத்தவர்களில் மாபாவின் பெயரையும் சிவி சண்முகம் குறிப்பிட்டார். ஒருவேளை அவர் அதிருப்தியில் இருந்திருந்தால் அவருடைய பெயர் இடம் பெற்று இருக்காது. எனவே அவர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய வாய்ப்பில்லை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.