மக்களே உஷார்… இனி ஆதார் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டாம்… UIDAI எச்சரிக்கை அறிவிப்பு…

By Nanthini on மார்கழி 10, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் ஏராளமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது ஆதார் மூலமாக புதுவிதமான மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது ஹோட்டல் ரூம் புக்கிங் உட்பட சில நிறுவனங்கள் ஆதார் நகலை பெற்று சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளன. இதனால் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக UIDAI கருதுகிறது. இதனால் இனி எந்த ஒரு இடத்திலும் நீங்கள் ஆதார் அட்டை நகலை கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக க்யூ ஆர் கோடு ஸ்கேனிங் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் ஆதார் சரிபார்க்கப்படும். இந்த செயல்முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.