பொருளாதார ஆலோசகர் To பிரதமர்.. இந்தியாவையே புரட்டி போட்ட இந்த மன்மோகன் சிங் யார்..?

Spread the love

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நல குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். கலந்த 1932 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த மன்மோகன் சிங் தனது கல்வியை பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். 1952 மற்றும் 1954 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். பிறகு பொருளாதார டிபில் முதுகலை பட்டமும் பெற்றார். 1962 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டி.ஃபில் பட்டம் பெற்றார். 1971 ஆம் ஆண்டு வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக அவருடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியது.

பிறகு தலைமை பொருளாதார ஆலோசகர் மற்றும் நிதி அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட ஒரு சில பதவிகளில் இருந்தார். 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நரசிம்மராவ் ஆட்சியின் போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் தேர்வாணார். நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக பணியாற்றினார். பிறகு 2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 14 வது பிரதமராக பதவி வகித்தார். 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து மாநிலங்கள் அவைக்கு சென்று அவரின் பதவிக்காலம் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய அரசு மசோதா மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் அவைக்கு வந்து மசோதாவிற்கு எதிராக வாக்களித்தார். தொடர்ந்து நாட்டுக்காக உழைத்த அவர் 1987 ஆம் ஆண்டு பத்ம விபூஷன், 1993 ஆம் ஆண்டில் நிதி அமைச்சருக்கான யூரோ பண விருது, 1993 மற்றும் 94 ஆகிய இரண்டிலும் ஆண்டின் நிதி அமைச்சருக்கான ஆசிய பண விருது, 1995 ஆம் ஆண்டு இந்திய அரசியல் காங்கிரஸின் ஜவஹர்லால் நேரு பிறந்த நூற்றாண்டு விருது ஆகிய விருதுகளை பெற்றார்.

இவருடைய கடின உழைப்பு மற்றும் அவருடைய பணிவு, மென்மையான நடத்தை ஆகியவற்றுக்காக அறியப்படும் மண்மோகன் சிங் தன்னுடைய தொலைநோக்கு பார்வைக்காக மட்டுமல்லாமல் இந்தியாவை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கும் வழி வகுத்துள்ளார். இப்படி தொடர்ந்து இந்தியாவிற்காக உழைத்த மன்மோகன் சிங்குக்கு நேற்று தெரிய என மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். 92 வயதில் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்த மன்மோகன் சிங் மறைவுக்கு அரசியல் மற்றும் உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

3 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago