Categories: சினிமா

வெற்றிமாறன் அசிஸ்டெண்ட்டுன்னு சொன்னா பெரிய நடிகர்களே அப்படி சொல்வாங்க… பெருமிதமாக பேசிய இயக்குனர்!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். தற்போது விடுதலை -2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் நான்கு ஆண்டுகளாக உருவாக்கி வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள பல நடிகர்களின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர்தான் டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ். அவர் நடித்துள்ள அமுதன் கதாபாத்திரம் அதிகாரம் கைக்கு வந்தால் எத்தகைய மனிதனும் எப்படி மாறுவான் என்பதைக் காட்டுவது போல அமைந்துள்ளது.

இந்நிலையில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி அவர் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகி தற்போது கவனம் ஈர்த்து வரும் தமிழ் ஒரு நேர்காணலில் “பல பெரிய நடிகர்கள் நான் வெற்றிமாறன் அசிஸ்டெண்ட்டுன்னு சொன்னா அவர் படத்துல சின்ன கதாபாத்திரமா இருந்தா கூட நடிக்குறோம். நீ சொல்லுப்பா என சொல்கிறார்கள். நாம் வியந்து பார்த்த நடிகர்கள் அப்படி சொல்வது பெருமையாக இருக்கும்.” எனப் பேசியுள்ளார்.

சமீபத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் கூட ஒரு படப்பிடிப்பின் போது இப்படி தன்னிடம் பகிர்ந்துகொண்டதாகவும் அதை வெற்றிமாறனிடம் தான் சொன்னபோது “அவர்கள் எல்லாம் பெரிய நடிகர்கள். அவர்களுக்கு நல்ல வேடங்களைக் கொடுக்க வேண்டும். சின்ன வேடங்கள் எல்லாம் கொடுக்கக் கூடாது” என அவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“ஸ்டாலின் சார் போல ஏமாற்ற மாட்டோம்”.. “மாதம் ரூ.2500, இலவச தங்கம், 200 யூனிட் மின்சாரம்”… தமிழகத்தையே அதிரவைத்த தவெக-வின் தேர்தல் அறிக்கை…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

3 minutes ago

ஜனநாயகம் லீக் விவகாரம்… “இவங்க தான் காரணம்… விஜய்க்கு சம்மந்தம் இல்லை”… சனம் ஷெட்டி போட்டு உடைத்த ரகசியம்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

11 minutes ago

“அண்ணன் சொல்லிட்டாரு.. தங்கச்சி முடிச்சுட்டாங்க”… நாடாளுமன்றத்தில் திமுகவின் ‘தர்மயுத்தம்’ ஆரம்பம்… ஸ்டாலின் எடுத்த விஸ்வரூபம்…!

மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…

18 minutes ago

“விஜய்யின் காலில் விழுந்து கதறினேன்.. எல்லாவற்றிற்கும் இவர்தான் காரணம்”…. திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் பரபரப்பு புகார்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

25 minutes ago

பகீர்!… சொந்தப் பேத்தியையே சீரழித்த தாத்தா!… காமவெறி முதியவருக்கு 61 ஆண்டு சிறை தண்டனை… சிவகங்கை நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…

28 minutes ago

BIG BREAKING: ‘ஜனநாயகன்’ திரைப்படம்…. சற்றுமுன் கோர்ட் அதிரடி உத்தரவு.. விஜய்க்கு மகிழ்ச்சி…!

சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…

37 minutes ago