திமுகவுக்கு திடீர் ஷாக்…. தீவிர அரசியலில் இருந்து விலகுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?… பின்னணியில் பரபரப்பு காரணம்….!

Spread the love

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக எவ்விதப் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் அவர் தொடர்ந்து வீட்டிலேயே முடங்கியிருப்பது கட்சி நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தென் மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட அவர் புறக்கணித்தது, கட்சித் தலைமை மீது அவர் தீவிர அப்செட்டில் இருப்பதையும், கட்சி நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகி நிற்பதையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

மற்றொருபுறம், அவருடைய இந்தத் திடீர் முடிவுக்கும் விலகலுக்கும் உடல்நலக் குறைவும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தொடர் உடல் உபாதைகள் காரணமாக அவர் தீவிர அரசியலில் இருந்து முற்றிலுமாக விலக வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் அவருக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகக் தெரிகிறது. கட்சித் தலைமையின் மீதான அதிருப்தி மற்றும் குடும்பத்தினரின் அறிவுறுத்தல் ஆகிய இரு வேறு காரணங்களால், அனிதா ராதாகிருஷ்ணன் தனது மாவட்டச் செயலாளர் பொறுப்பைத் துறப்பாரா அல்லது திமுக தலைமை அவரைச் சமாதானம் செய்யுமா என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைக்கு சூடுபிடித்துள்ளது.

Nanthini

Recent Posts

தலைவணங்கிய கோலிவுட்..! மாத்திரை போடக்கூட விடலையா?!… சிவாஜிக்கு தனுஷ் அப்பா கொடுத்த அதிர்ச்சி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?…!!

தமிழ் சினிமாவில் தன் ஈடு இணையற்ற நடிப்பால் பெரும் சகாப்தமாகத் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். கதாநாயகனாக மட்டுமல்லாமல் பிற்காலத்தில் பல…

21 seconds ago

ராமர், சீதை தெய்வம் இல்லையா?… ராவணன் கடத்த காரணமே இதுதான்… வெளுத்து வாங்கிய பயில்வான்… கிளப்பிய புது சர்ச்சை…!!

இயக்குநர் நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வில், சீதையாக நடித்துள்ள சாய்பல்லவி ராவணன் குறித்துத் தெரிவித்த கருத்துகள் இணையத்தில்…

6 minutes ago

“சுற்றுலாவின் கடைசி நிமிடம்…” ஜாலியாக கடலில் விளையாடிய ஐடி ஊழியர்கள்…. ராட்சத அலையில் சிக்கி பலியான சோகம்… பகீர் பின்னணி…!!

கர்நாடக மாநிலம் கோகர்ணாவிற்கு வார இறுதிச் சுற்றுலா சென்ற பெங்களூரு ஐடி நிறுவனத்தைச் சேர்ந்த 3 ஊழியர்கள் கடலில் சீறிப்பாய்ந்த…

12 minutes ago

6 மாதக் குழந்தைக்கு அரியவகை குறைப்பாடு…! நுரையீரலுக்கு செல்லும் பால்… வெற்றிகரமாக சாதித்து காட்டிய மருத்துவர்கள்… குவியும் பாராட்டுகள்…!!

மும்பையில், 6 மாதக் குழந்தை ஒன்றுக்கு இருந்த 'டைப் 3 லாரிஞ்சியல் க்ளெஃப்ட்' என்ற அரிய பிறவிக் குரல்வளைக் குறைபாட்டை…

13 minutes ago

சீக்ரெட் டீலிங் உண்மையா?… ரஜினிக்கு அநீதி?… 1000 கோடி வசூல் கனவை கலைத்ததா அரசு?… வெடிக்கும் விவாதம்… விஜய்க்கு எதிராக திரும்பிய திரையுலகம்…!!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு…

13 minutes ago

ஐயோ என்னால முடியல..! “என் தங்கமே.. என்னை விட்டு ஏன் போன?”… கதறி அழுத விஜய் ஆண்டனி மனைவி… கலங்க வைக்கும் பதிவு…!!

திரைப்பட இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் குடும்பத்தில் ஏற்பட்ட மீள முடியாத துயரங்களில் ஒன்று அவரது மகள் மீராவின் திடீர்…

21 minutes ago